பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

“எப்பொருளும் அவரவர் எண்ணத்தின் வழி இன்பமாகத் தோன்றுங்கால் அவரவர்களுக்கு இன்பமாகத் தோன்றுவதை அவரவர் செய்யலாமே” என்ற கேள்வி வருமோ என்றஞ்சுகிறேன். அவரவர்க்குத் தோன்றியதை அவரவர் செய்வதென்றால் உலகில் நூல்கள் வேண்டுவதில்லை, ஒழுங்குகள் வேண்டுவதில்லை; ஒன்றுமே வேண்டுவதில்லை யென்றாகிவிடும். அதனை எண்ணியே “மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்” என்ற மூதுரை எழுந்தது. இதனால் எவர் எண்ணத்தின் உரிமையையும் நான் பிடுங்குகின்றேனென்று எவரும் தருதலாகாது. உலகில் எல்லோரும் பேரறிவு படைத்தவர்களாகவிருந்து செய்வன தவிர்வன உணர்ந்தவாகளாகவிருப்பாரானால் அவரவர் எண்ணத்தின் வழிநடப்பதில் தடையொன்றுமிராது, உலகில் பேரறிவு படைத்தவர் ஒரு சிலரே இருத்தல் இயல்பு. இது என்றுங்கண்ட உண்மை; இதனை ஆதாரத்தோடு மறுக்கமுடியாது இதனால் யாரும் தாங்கள் அறியாமையுடையவர்கள் என்று கோபங் கொள்ளலாகாது. உண்மையுணரும் ஆற்றல் வாய்ந்த பேரறிஞர் ஒரு பகுதியார் பண்டும் இருந்தனர். இன்றும் இருக்கின்றனர். பண்டிருந்த பல்லோர் செய்யத் தக்கன இன்னதென உலகத்து மக்கள் உய்யும் பொருட்டு அறநூல்கள் எழுதி வைத்துள்ளனர். இன்றுள்ள ஒருபகுதியாரும் அவைகளை விளக்குவதோடு காணும் உண்மைகளையும் உலகிற்கு உணர்த்தி வருகின்றனர். அவைகளை நன்கு ஓர்தல்வேண்டும். அவை