உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

யனைத்தையும்” அப்படியே கொள்ளவேண்டுமென்றும் நான் கூறவில்லை. அகமூடக் கொள்கைக்கட்கெல்லாம் ஈண்டு இடமில்லை. ஒவ்வொருவரும் தங்கள் அறிவு கொண்டு எல்லாப் பொருள்களையும் எல்லோர் கருத்தையும் அலசி ஆராய்லாம் தாங்கள் தெளிந்து கொள்ள முடியாதவற்றை நெருங்கிய அன்பர்கள் துணைகொண்டு அறியலாம். அதனின்றும் தாங்கள் உண்மைதேறி அவ்வழியொழுகுதலே மாண்புடைத்து.

எவரேனும் தான் சொல்லுவதுதான் சரி, அதை எல்லோரும் ஆராயாமலே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறுவாரானால் அவரே பேரறியாமையுடையவர் என்பது நிச்சயம். அறம் வகுத்த பேரறிஞர்களுள் வள்ளுவரை நிகர்த்தார் எவருமலர் என்பது அறிஞர்களின் கருத்து. அப்புலவர் பெருமானார் நான் சொல்வதே மறை: அதனை ஏற்றுக்கொள்க என்று கூறினாரல்லர். அவ்வாறு கூறியிருந்தால் அவர் உலகம் போற்றும் அறிவுபெற்றிருக்கமுடியாது. “எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் கண்பதறிவு” “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்னும் இரண்டு அருங்குறட்களை அருளினார் அப்பெருந்தகை.

எனவே அறிஞர்கள் கருத்துவழித் தம் அறிவைச் செலுத்திமெய்ப்பொருள் காண்டில்