பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
7

7 வள்ளுவர் பழிப்பதனால், அதன் இழிவு தெளிதல் எளிது. அறம் திறம்பாது மனத்தை நெறிவழி நிறுத்து வது அறிவு, "தீதொரீஇ, நன்றின்பால் உய்ப்ப தறிவு” எனுங்குறளால் அறிவிலக்கணம் விளக்க மாகும் , அதுமாறாது நிலவும் உள் ஒளியாதலால், அதனைக்கரவாப் பண்பென்பர் தமிழ்ச் சான்றோர். கணந்தொறும் மாறும் முகிலினம் போல, உணர் வின் தன்மை ஓயாது மாறும். அறிவு போல் அதனில் விளையும் இன்பமும், நிறை நீர்த் தாகிப் பிறைபோல் வளரும். நெறியால் ஒளிரும் உணர்வுநிலையாலே உவகை நிலைமாறும். நன்றிலும் , தீதிலும் சென்று திரியுணர்வு போல் நின்று நிலையாது உவகை நின்ற நிலைமாறும். அறிவுத்துறையே அறநெறியாதலின் அறிவுதரும் இன்பம் அறத்தின் விளைவாகும் 'அறத்தான் வருவதே இன்பம், மற்றெல்லாம் புறத்த, புகழு மில, என்ற பழந்தமிழ்க் கொள்கை இன்பத்தின் இயல் விளக்கும். கடைசியாக, ஆரியர் ஆனந்தம், தமிழர் இன்ப மாகாமை ஆராய்ந்து அறியத்தக்கது. சந்தோஷ மும் துக்கமுமற்ற வெறுநிலையே ஆனந்தம் என்பது ஆரியர் கொள்கை. இன்பத்தின் முடிவு துன்பம்" என்பது அவர்மதம். அதனால் அவ்விரண்டும் ஒழிந்த வெறுநிலை (சாந்தி)யே ஆனந்தம் என்று அவர் கொள்வர் உவப்பின் மறுதலை உவர்ப்பெனக்