பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இனிதே!! இனிதே!!

13

காதல் இனிதே! காதல் இனிதே!
கண்ணெடு கண்கள் கவ்வும் காதல்
இனிதே! இனிதே! எவற்றினும் இனிதே!
என்றனள்! நானே எடுத்துரை என்றனன்!

சிற்றில் அமைத்தே சிறுசோறு படைக்க
உண்டான்; இன்பம் உண்டான்; சிற்றில்
அழித்தான்; என்னை அழுதிடச் செய்தான்;
பட்டி மகனென் பள்ளிப் பாட்டையில்
எட்டி யிருந்தே இளநகை பூத்தான்!

எட்டின நாட்கள்; இணைந்தன விழிகள்!
வந்தான்; போனான்; வந்துகொண் டிருந்தான்;
சந்திலோர் நாளென் சிந்தையைப் பறித்தான்;
காலையும் மாலையும் கடன்கொடுத் தான்போல்
மாலையில் வருவான்; காலையில் வருவான்;
குரலால், விழியால் குறிப்பை அனுப்புவான்;
திரையிட்ட சன்னல் மறைவில் பார்ப்பான்;
கதவின் இடுக்கில் கண்ணொளி பாய்ச்சி
இதயத் துள்ளே ஏற்றினான் அன்பை!
பொய்கை ஆடப் புறப்பட் டேன்நான்!
கையை வீசிக் கருத்தில் லான்போல்
மைதவழ் மாமலைச் சாரலின் ஓரம்
நடந்தான்; அவன்விழி நடந்ததென் னருகில்

குடத்தை இறக்கிக் குனிந்தேன் !
அங்கே மடமட வென்று வந்தான்; நின்றான்;
‘அடடா! கொண்டையில் அமைந்த பூவில்
எத்தனை வண்டுகள்? எத்தனை வண்டுகள்’
எனச்சொலிச் சிரித்தான்; என்விழி பறித்தான்!