பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

இன்ப இலக்கியம்

சொல்கிளி சொல்ல உரைக்கும் பசுங்கிளி! ஒவ்வா உவமையைத் தேடி அலுத்தேன்! அவளுக் கவளே! தமிழ்த்தொகைப் பாடல்கள்! தோளில் பிரிந்து புரளும் நறுங்கூந்தல் உச்சி மலையில் உறையும் முகிற்குலம்! காதணி தொங்கலோ கார்மின்னல்! அம்மின்னல் கண்டே குயில்கள் களிப்பேறப் பாடினவே!

இன்னும்கேள்: வல்லான்கைப் பாவையோ? மாமணத் தென்றலோ? சொல்லாழம் தோய்ந்த கலியோ? அகம்புறமோ? என்னென்பேன் தோழா! எனப்பறித்தே போனாள் ! நினைவில் அவளே நிழலில் அவளே! கனவிலும் அன்னாள் சீர்க் கட்டழ கேதோன்றும்! ஓரிருநாள் வந்தென் உளத்தை மலர்விழியால் ஈர்த்தாள்; உளத்திற்கூர் ஈட்டியைப் பாய்ச்சினாள்! நோய்தந்தாள்; நோய்க்குப் பகைமருந்து தானென்(று) அறியாள்; அறியாள்என் னுள்ளம்! அறியாள்! வெறிகமழ் மாமலை, சோலை, மலர்ப்பொய்கை, ஊர்ப்பொது மன்றம், குளம்,குட்டை, தோப்பு, விளைந்த வயற்காடு, வீட்டின் புறத்தோட்டம், கன்னித் தமிழாய் கழகங்கள், ஓவியத்தைத் தீட்டும் திருக்கூடம், பந்தாடு மாடங்கள், தையல் பயிலும் விடுதியில் தையலைத் தேடினேன்; ஏமாந்தேன்; செய்வ தறியேன்; தெருவழியில் நான்செல்லா நாட்களொன் றில்லையே! செல்வம் இழந்த திருடன் தன் செல்வத்தைத் . தேடுதல்போல் தேடிஅலேந் தேன்;மனஞ்

. > . . . சோர்ந்தேன்!