பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4. இவன் யார்?

           அக்கா! இவன் யார்? அறியாதான் போல

           எக்காலும் எவ்விடத்தும் என்னடியைப் பின்பற்றிப்
           பக்கம் வருகின்றான்;பார்க்காமற் பார்க்கின்றான்!
           ஆணழகன்;காண்போர் அகத்தழகன்;திண்தோன்
           செக்கச் சிவந்த மேனியான்; சிரிப்பிதழான்;

           ஒளிசெய்து நாட்டிற் குயிரளிக்கும் வெய்யோன்;
           அளிசெய்விழியான்;ஆக்கஞ்சேர் மாமழை;
           இல்லார்க் களிக்கும் ஈகைக் குணமுடையான்;
           நல்லோர் ஒழுக்கம் எல்லாம் உடையான்;
           கூத்து முறையுணர் குறுமகளிர் ஆட்டம்போற்
           பூத்துக் குனிந்தாடும் பூங்கொம்பை மெல்லத்
           தீண்டாது தீண்டிவரும் தென்னுட்டுப்பூந்தென்றல்;
           பழக இனிக்கும் பழந்தமிழ்ப் பாட்டக்கா!
           இன்னோ ரன்ன இனிய பண்பு
           நிறைந்துளன் என்றே நினைக்கத் தோன்றும்!
           அன்னேன். அவன்தன் ஆண்டகை விட்டுக்:
           கருமான் உலைத்தீக் கொழுந்துபோல் இலவன்
           பெருமரம் தோட்டத்திற் பூப்பூக்கப் பூத்தேடிப்
           பொருளெல்லாம் தேயப் புதிதாய் ஒருவரிடம்
           பொருள் கேட்க நானும் புதியன்போல் நிற்கின்றன்!