பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவன் யார்? - 21

வீட்டகத்திற் கெண்டை விழிக்கழகு செய்து காட்டகத்தில் தோகை கார்கண்டே ஆடல்போல் நாட்டகத்திற் பெண்கள் நடம்பயிலும் கூடத்துள் நோட்டம்பார்ப் பான்போல் நுழைகின்றான் அக்கா!

மலை தவழும் கார்கடலில் மடங்குதிரைக் கூந்தல் தலைவாரி நூலடுக்கை மார்பகத்தில் தாங்கிக் - கலைவளர்க்கும் கல்லூரிக் கிளம்பிடிகள் போகச் சிலையாகத் திசைபார்த்து நிற்கின்றான் அக்கா!

வற்றாத நிழற்சாலை, வாள்போன்ற கொன்றை நெற்றொலிக்கும் மரக்காடு, நீளோடை, பொய்கை கற்றார்வாய்ப் பொருள்கேட்கும் -

(பிள்ளையைப்போற் காத்துச் சுற்றியென வந்துவந்து தொடர்கின்றான் அக்கா

கொடியேறிப் பூத்த கொன்றை அடர்கிளையில் அடிதப்பி வந்த குயில்தேடி, அக்குயிலக் கொடுவேலும் கையுமாய்க் கூர்ந்தாயும் வேடன்போல் நெடுஞ்சாரல் வந்துவந்து நிற்கின்றான் அக்கா! மலைக்காட்டுக் குன்றில் வலப்பட்ட மான்தப்பி இலையத்திக் காதுயர்த்தி இருட்குன்றம் போய்மறையச் சிலேயேந்தித் தேடிச் செய்வதறியாது நிலைகுலைந்து நிற்பான்போல் நிற்கின்றான் அக்கா!

இவன்யார்?

எக்காலும் எவ்விடத்தும் என்னடியைப் பின்பற்றிப் பக்கம் வருகின்றான்; பார்க்காமற் பார்க்கின்றான்; பேச நினைக்கின்றன்; பேசியதே இல்லையக்கா!