பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

இன்ப இலக்கியம்

வாய்விட்டுச் சொல்லாது மனமடக்கிப் பார்த்தாலும் தாய்நாடும் கன்றுபோல் தாவி அவனருகில் போய்நாடும் என்நெஞ்சின் போக்கே எனக்கு வாய்த்த பெரும்பகையாய் வந்து முளைத்ததடி!

தாயருகில் இருந்தாலும், தமிழ்பாடக் கேட்டாலும் தேய்பிறையில் திங்கள் ஒளிமங்கல் போலென் பாய்புலியைக் காணாது பசப்பூறும் நெற்றி!

பழம்புளியைக் கூட்டிப் பலகறிகள் இட்டுக் குழம்பாக்கும் சட்டியின் மூடிசொட்டும் நீர்போல் அழுதழுது நீர்மல்கி அழகிழக்கும் கண்கள்!

வேய்வளரும் மலைத்தோளான் மென்னகையைக் காணாது காய்ந்த கொடியில் நிறமிழக்கும் கொவ்வைபோல் வாய்க்கடையில் நிறமிழக்கும் மலர்பூத்த உதடு! மயலூட்டும் அன்பன் வரைத்தோளைக் காணாமற் பெயலற் றுலர்ந்த பெருமூங்கில் போல இயலற்ற தோள்கள் என்செய்வேன் தோழி! சிலையேந்தும் தீஞ்சொல்லான் திருத்தோள்கள் காணாது.

கலகலத்த வண்டிக் கட்டவிழ்தல் போலென்

நிலைகுலைந்த முன்கையின் வளைநெகிழ்ந்து போகும்!

நிழலில் துளிர்த்த சிறுகினையின் நீள் இல்போல்

முழவார்க்கும் பாம்போடை முன்கண்ட காதலனின் அழகெண்ணி என்மேனி அழகற்றுப் போகும்

இளவேனில் அத்தானின் இன்னுரையைக் கேளாது.

குளம்வற்றத் தாமரைப்பூங் கொடிவாடல் போல் நான் வளங்கெட்டு மனஞ்சோர்ந்து வாடுகிறேன் தோழி: