பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

இலக்கிய இன்பம்

உடைமை பொதுசெய்யா நாட்டில் உயரும் மடைமைபோல் ஆகும் அவனில்லா வாழ்க்கை! நிலவில்லா வான நீள் இரவைப் போலப் பலரஞ்சக் கூடும் அவனில்லா வாழ்க்கை! மணமில்லா வண்ண மலர்பூத்த தைப்போல் குணமற்றுப் போகும் அவனில்லா வாழ்க்கை! சொல்லாழம் தோயாக் கல்லார் கவிபோலச் செல்லாத தாகும் அவனில்லா வாழ்க்கை! இசையற்ற பாட்டின் இயல்புபோல் என்றும் பசையற்றுப் போகும் அவனில்லா வாழ்க்கை!

அதனால்,

உடுக்கை இழந்தவன் கைபோல் உதவும்

வடுக்கண்ணாய்! என்தோழி! மாதவிப்பூங் கொத்தே! இமையே! எனதுயிரே! என்னுயிரை மீட்கநீ

காலைக் கதிரவனும் காட்சிப் பெருவிருந்தாம்! பூமணத்தை வாரிவரும் பூந்தென்றல் காதலனைக்

கண்டு நெருங்கிக் கதிர்க்கேங்கும் தாமரைப்பூ உண்டென்றுரைத்துவாடி !