பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. அறிவாளோ?

திருவிழாக் காலம் தெருநெடுக நின்றே அருங்காவல் செய்வோர் அணிபோல் மரங்கள் வரிசையாய் நிற்க, மலர்க்கிளையின் உச்சி பொரிவண்டு தாதுண்ணப், புள்ளிக் குயிலிசைக்க, முன்னாள் கிளைபூத்து மூத்த மலர்களெல்லாம் வீழ்ந்து சுருங்கி விரித்தபொன் ஆடைபோற் பாட்டை நெடுகக் கிடக்க, மனைதோறும் கூடத்தில் முன்னாள் குலவி மகிழ்ந்தசொல் மாடத்திற் பைங்கிள்ளை வாய்விட்டுக் கூறிவரக், கூண்டுக் கிளியெடுத்துக் கொஞ்சித் தெருவுள்ள சன்னல் வழிபார்க்கும் மின்னலைக் கண்டார்கள்! கண்டார்கள் வான் நிலவைக் கண்டார்கள் தோகையை! வாய்திறந்து நின்றார் மலைத்து! - அங்கொருவன், கண்கலங்கி மூச்செறிந்து பார்த்தான் கனிந்து!

எண்விளித்தான் :

அழகொழுகக் கல்லில் அமைத்த சிலைபோலும், முழுநிலவு பொய்கை முளைத்த மலர்போலும் எழிலுடையாள் உன்தலைவி!என்னென்பேன் தோழி கண்டார் உயிர்வாழார் என்ப தறிவாளோ?