பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவாளோ? - 29.

தென்றலைப்போலும்,செழும்பரிதி மூழ்கும் குன்றடர்ந்த இருள்சோலைக் குளிர்மையைப் போலும், அன்றலர்ந்த பூப்போலும் இனிமையாள் உன் தலைவி! கண்டார் உயிர்வாழார் என்ப தறிவாளோ?

இன்னுங்கேள்:

அவளே வெறுத்தென்ன? அவளை ஈன்றெடுத்த பவள மணிமாலைத் தாயை வெறுத் தென்ன? குவளை மலர்த்தோழி! உன்னை வெறுத்தென்ன?

குடியை வெறுத்தென்ன? குடிதந்த அந்தக் கொடியை வெறுத்தென்ன? கொடுநோயாம் உன் தலைவி நடையை வெறுத்தென்ன? நான் பிழைக்கப் போமோ?

உயிர்த்தோழி!

சிற்றூரிற் கண்டாரின் செவ்வி அழித்தொழிக்கும் தொற்றுநோய் என்றவளைவீட்டில் அடைத்துத் தடைசெய்யா நாட்டுப் பெருங்குடி மக்களே! நஞ்சின் கொடியவ ராம்!

எனக்கூறி என்னருகில் நின்று தவித்துச் சினவேங்கை சோர்ந்து செயலற் றிருப்பதைப்போல் ஏங்கித் தவித்தான் அவன்!

நானோ,-

மனமிரங்கி ஒடை மலர்ப்பொய்கை காட்டி உனைவருத்தும் நோய்க்கு மருந்தொன்று கூறித் தனிவிடுத்து வந்தேன்! நட!