பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7. சிரித்தாள்

யார் அவள்?.. அவளேதான்!...யாழ்கிடப் பதைப்போல், தமிழ் நூல் தனியே படிப்பாரின்றிக் கிடப்பதைப் போலக் கிடக்கின்றாள் கிள்ளை!

வேர்மேல் தலைவைத்து மெல்லுடலை நீட்டி நீர்க்கெண்டை நோக்கி விழிக்கெண்டை பாயக் கிடக்கின்றாள் கார்காணுத் தோகை கிடப்பதைப்போல்! கண்ணத் திறக்காது கல்லிற் செதுக்கிவைத்த வண்ணச் சிலபோலென் வாழ்வரசி மரத்தடியில் எண்ணம் எழுந்தோட விழியேங்க நறுஞ்சாந்துக் கிண்ணம் கிடப்பதைப் போற்கிடக் கின்றாள்!

அவளருகில், -

மெல்ல நெருங்கிநான் வேறேதோ கேட்பான்போல் சொல்லாடிக் காண்பேன் இனி! நீலக் கடல்மேல் நெளியும் அல்போன்ற கோல நறுங்கூந்தற் பொற்கொடியே! மக்கட்குப் பால் நிலவு நன்மை பயக்க எழுதலன்றி

ஆல்காட்டிற்காய்வதால் என்? போரைப் புறங்கண்ட என் நாட்டு மூவேந்தர் கூர்வாளைப் போன்ற குளிர்விழியே! செப்பக்கேள்! போர்வாள் பகையை மறந் (து) அன் புடையோரை வேர்கல்லி வீழ்த்துவதால் என்?