பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிரித்தாள்!

வானைத் தொடுமலையின் உச்சி வடித்தெடுத்த தேன்போன்ற இன்சொற் சிறுகுயிலே! அன்புடையோர் ஊனில், உயிரில் இனிக்கும் தமிழ்ச்சொற்கள் போனவிட மெங்கோ? புகல்!

சார்ந்தார்க் கினிமை தரும்பொதிகைச் சாரல்வாழ் ஈர்சாந்தக் கிண்ணத் தெழிலே! நல் லன்புடையோர் சீரைக் கெடுத்துத் தெருவில் விடுவதனால் ஊருன்னத் தூற்றிடா தோ?

வளம்பெருக்கும் நீள்குன்றச் சாரல் வளர்ந்த இளமூங்கில் நற்றோள் இளம்பிடியே! அன்புடையோர் உளம்வாட்டித் தீய்த்துக் கெடுப்பதுவோ பெண்கள் தளதளத்த தோளின் தகை? நாட்டிற் குயிரளிக்கும் நன்மழையை வானத்திற் கூட்டிவரும் கார்மின்னற் சிற்றிடையே! அன்பரை வாட்டி வதக்கி மனஞ்சோரச் செய்வதுதான் தீட்டா இடைச்செயலோ? செப்பு!

வாத்தும் பிடியும் வளர்காட்டுப் பாறைமேல் கூத்துப் பயிலும் களிமயிலும் உன்சாயல் பார்த்து மிகவேங்கச் செய்யலாம்! அன்பரைத் தீய்த்தழிப்பதாலென்ன வாம்? செப்பக்கேள்! -

சென்ற இளமை திரும்பா!மலர்ச்சோலைக் - குன்றும் சுனையும் குளிர்நிழற் பூக்காடும் இன்றேபோல் என்றும் இருக்குமோ? நினைத்துப்பார்!’

பேசாயோ?