பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

இன்ப இலக்கியம்

 கார்முதிர்ந்த நன்செய், கனிமுதிர்ந்த தோப்பு, கூர்முதிர்ந்த வேல்விழியாள் என் தலைவி தேடி
ஊரருகே நீவருதல் நன்றன்று! வந்தால்,
போர்ப்புலியே வந்ததென ஆர்த்தெழுவார் மக்கள்!

 நீர்பூத்த செவ்வல்லி, நிலம்பூத்த முல்லை, வேர்பூத்த குண்டுபலா என்தலைவி தேடிக் காரிருளில் நீவருதல் நன்றன்று; வந்தாற், போர்யானை வந்ததெனப் புடைக்கஎழும் ஊரே!

உண்மை

 வெளிப்பட்டால் தலைவி உயிர்வெளிப் படுமே!
என்னுயிர் அவளுடன் என்றும் இணைந்ததே!
விரைவில் திருமணம் புரிதல் வேண்டும்! குடிப்புகழ் விளங்க வேண்டுமே!