பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இன்ப இலக்கியம்
36

 வான்இடியை மலேஇடிக்க, வான்மின்னல் வழிகாட்ட தேன்மொழியைத் தேடி வரும்செய்கை, செழுந்தேனே! கான்மயிலாள் என் தலைவி களவொழுக்கம் காட்டும்
ஊன்பசலை கண்டேசும் ஊர்வாய்க்குப் பூட்டிடுமின்!

 வழிப்பறிப்போர்க் கஞ்சாமல், மதயானைக் கஞ்சாமல் ஒழிவின்றி வரும்செய்கை, உச்சிமலைச் செழுந்தேனே! கழிநீல மலர்விழியாள் என்தலைவி களவொழுக்கம்
பழிபேசும் உணர்வில்லா ஊர்வாய்க்குப் பூட்டிடுமின்!

இன்னுங்கேள்:

 ஆக்கப் பொறுத்தோம் ஆறப் பொறுப்பமெனும்
நோக்கோ டிருந்தாலும், நூறுமுறை நினைந்தாலும் பூக்காட்டுத் தாதுப் பொன் பசலே மேனியளைச்
சாக்காட்டுக் கோட்டும் தரம்குறைக்கும் ஊர்ப்பேச்சே

 எட்டியது கிட்டியது பறப்பெதற்கோ என்றெண்ணிக் கட்டோடிருந்தாலும், காலம்எதிர் பார்த்தாலும்
மட்டார் குழலி உன்குறையை இவ்வூரார்
திட்டப் பொறுப்பாளோ? செத்தே மடிவாளே!

 குளத்துநீர் வருவெள்ளம் கொடுபோகா தென்கின்ற உளத்தோ டிருந்தாலும், ஊமையாய் ஆனாலும்,
களத்துழவன் தன்குறையைக் கண்டவர்கள் கண்டபடி
தளர்த்த உரைப்பதெலாம் காதேற்று வாழ்வாளோ?