பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. பொருள் தேடி வருகின்றேன்


 செப்பு மலேபோலும் தீயின் உருக்கோடி
அப்படியே தேங்கி உறைந்த அணிபோலும்
நீரில்லா மேடு நிழலில்லாப் படுபள்ளம்
நேர்இல்லா வழிப்பாட்டை நெடுகும் சிதறுண்ட
கூரான உளிபோற் குறுங்கற்கள் பெருங்கற்கள் தார்க்குச்சி போலத் தாக்கும் வழியெங்கும் அறிவில்லா மாற்ருன் படைஅழித்த பேரூர்போல் செறிவின்றி மொட்டை மரங்கள் கிளைகாய்ந்தே
எங்கெங்கோ ஒன்றிரண்டு எழிலற்று நின்றிருக்கும் வெங்கொடுமை மிக்க விரிகானம் தாண்டிச்
சென்று பொருள்தேடித் திரும்பி வருகின்றேன்!
என்றும் பொருளுக் கடிமையே மண்ணுலகம்!
கன்று பசுநிறைத்தே கடிமனையை ஒம்பிடலாம்!
அன்றன்றும் வருவோர்க்கு அகமகிழத் தந்திடலாம்!
பொருள் இல்லார்க் கிவ்வுலகம் இல்லையென்ற

[பொன்மொழியை

 ஒருநாள் மறப்பதுவோ? உறுபொருளைத் தேடியபின் வருவார் பலர்மனக்கே வகைவகையாய்ப் பணிபுரிவார்;
தருவார் புகழ்மாலை; தனிமதிப்பும் உண்டாம்!