பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

தமிழ்மணக்கும் புதுவை மாநிலத்தில் விடுதலைக் குயிலாகப் பாரதியாரும் புரட்சிக் குயிலாகப் பாவேந்தரும் நனிசிறந்தனர். அவர்களின் வழியிலே புதுமைக் குயிலாக வாணிதாசனர் திகழ்ந்தார். கொள்கையில், கொண்ட தமிழுணர்வில் மாறாமல் வாழ்ந்தார். தம் பாத்திறத்தால் தன்மான உணர்வுத் தணலை மங்காது காத்தார். இவருடைய பாக்கள் இனிமை பயப்பன; உணர்வைத் தருவன; எழுச்சியை ஊட்டுவன; தமிழக மறுமலர்ச்சிக்குப் பெரிதும் துணை நிற்பன.

அன்னாரின் நூற்களை வெளியிடுவதில் யாங்கள் பெரு மகிழ்வெய்துகின்றேம். முன்னர் ‘எழிலோவியம்’ எனும் நூல் வெளியிட்டோம். இப்பொழுது ‘இன்ப இலக்கியத்தை’ வெளியிடுகின்றோம்.

இந்நூலை நன்முறையில் அச்சிட்டு உதவிய பாவலர் நாரா. நாச்சியப்பன் அவர்களுக்கு எங்கள் நன்றி.

புதுச்சேரி புதுவைத் தமிழ்க் கவிஞர் மன்றம்
17–9–79