பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AMMSMAAAS AAAAA ASASASAMMAJASJASAAMAMMeSAAAAAAASAAAA

காட்டு வழி

இரவிலேதானே ஒடியாடி விளையாடி உணவு தேடி அலையும் ? காட்டுப் பன்றிகள் அங்கும் இங்கும் ஒடும். பன்றியைக் கண்ட ஆண் புலி அதை அடித்துக் கொல்லும். ஒரே வாயில் அதை விழுங்கும்படி அந்தப் புலிக்கு அவ்வளவு பெரிய வாய்; ஆழமான வாய். பேழ் வாயையுடைய புலி, தான் கொன்ற கேழலே (பன்றியைத்) தன் மனைவிக்கும் குட்டிகளுக் கும் ஊட்டுவதற்காக இழுத்துச் செல்லும். பலா மரங்கள் கிறைந்த காட்டில் பலாப் பழம் கம்மென்று மணக்கும். புலி காட்டுப் பன்றியைத் தரதர வென்று இழுத்துச் செல் வதனால் அந்த மலேச்சாரலெல்லாம் அதன் இரத்தமும் ஊனும் சிதறி விழுந்து புலால் நாற்றம் வீசும். மூங்கில்கள் வளர்ந்து ஓங்கிய மலையில் இந்தக் காட்சிகளே நேரில் கண்டவர் கள் இவற்றைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். முதல் நாள் பலாப் பழம் மணம் வீசின. இடத்தில் அடுத்த நாள். முதல் சில நாள் புலால் நாற்றம் சகிக்க முடியாதாம். பேழ் வாயையுடைய ஏற்றை (ஆண் புலி) கேழல் அட்டு அதைப் பல அமன்ற (செறிந்த) அடுக்கம் (மலேச் சாால்) காறும்படி, ஈர்த்துச் சென்றதுதான் அதற்குக் காரணம். . அங்கே மூங்கில்கள் ஒன்ருேடு ஒன்று உராய்ந்து ஒலிக்கும்.

97