பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASAS SJS SS MAAASASAAAAASA SAASAASSAAAAAAS SA SAS A SAS SSASAS SSAS SSAS SSAS

காட்டு வழி

மேலே ஏறமாட்டாமல் தவிக்கும்; பிளிறும். அந்த முழக்கத்தைக் கேட்ட பெண் யானே யானது அங்கே வந்து பார்க்கும். களிறு அசும்பிலே (குழியில்) விழுந்து மேலேற மாட்டாமல் இருப்பதைக் கண்டு அதை மீட்க முயலும். கைகொடுத்துத் துளக்க முடியுமா? பள்ளத்தில் அல்லவா யானே விழுந்து கிடக் கிறது? அதிலிருந்து காவி ஏற முடியாது. படி படியாக மண்ணே வெட்டினல் அந்தப் படிகளின்மேல் காலே வைத்து மெல்ல ஏறலாம். காட்டு யானைகளுக்கு இப்படி உதவி செய்கிறவர்கள் யார்? மண்ணே வெட்டிப் படியாக்கும் மக்கள் யார் வரப் போகிருரர்கள்? பிடி ஒரு தந்திரம் செய்யும். அருகிலுள்ள மரங்களே முறித்து அந்தக் குழியில் போடும். அந்த மரங்களையே படிகளாகக் கொண்டு களிறு மேலே ஏறி வந்துவிடும். ஆண் யானே பிளிறுவதும், அதைக் கேட்டு வந்த பிடி கத்துவதும், மரங்களே முறித்துப் போடுவது மாகிய ஓசை கெடுந்துாரம் கேட்கும். மலேயின் ம்ேலே உள்ள குகையிலே சென்று மோதி எதிரொலிக்கும். வானே முட்ட வளர்ந்த சிக ரத்தின் விபர்களில் குன்ககளில்) சென்று தாக்கிய ஒலி நாலு இசையிலும் சிலம்பும். அந்த ஓசையைக்கேட்டால் உள்ளம் நடுங்கும்.

99