பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ASA SSASAASAASAASAASAA

இன்ப மலே

காட்டிலே புல்லேயும் நீரையும் உண்டு வாழ்கிறதோ, அந்த விலங்கைத்தான் சொல் கிறேன். தோழி : மட மான் போன்ற பெண்ணே ! உன்

கருத்து எனக்கு விளங்கி விட்டது. தலைவி ஆம், மான் அந்த வழியில் போகும் போது, மடமானே, எழில் மானே என் றெல்லாம் அழைக்கும் என் போன்ற பெண் போகக்கூடாதா? மான் செல்லும் வழியிலே மான் போன்ற நானும் மெல்ல மெல்லப் போகலாமே ! - தோழி : இருட்டில் வழி எப்படித் தெரியும்? தலைவி : மின்னல் மின்னுமே ; அந்த மின்ன வின் ஒளியிலே மெல்ல மெல்லச் சிறுக அடி யிட்டு நடந்து போகலாம் ; மயங்காமல், வழி தட்டுக் கெடாமல் நடந்து போய்விடலாம். தோழி: எல்லாவற்றையும் தண்ணிர் குடிப்பது போல எளிதிலே சொல்லிவிட்டாய். செயலில் செய்யும்போதல்லவா, துன்பம் தெரியும் ? தலைவி : துன்பம் இல்லாமல் இன்பம் ஏது ? எவ்வளவுக்கு எவ்வளவு துன்பத்தின் கடுமை மிகுதியாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ் வளவு அதன் பின் கிடைக்கும் இன்பத்தின் சுவை மிகுதியாகும். இங்கே, தலைவர் வருவார் வருவார் என்று காத்துக் கிடந்து, அவர்

102