பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப மலே

மலையின் குகையிலே சென்று ஒலிக்கும் அவருடைய நாட் டில், எண்ணுவதற்கரிய, உயர்ந்து தோன்றும் பல கற்களி னிடையே மான் செல்லும் வழியில் கலக்கமின்றி, மின்னல் ஒளி விட அதன் துனே கொண்டு குறுக அடியிட்டு மெல்ல மெல்லச் சென்று, மழைத்துளி தலையிலே பெய்த ஈரமான நீல மணியைப் போன்ற கடந்தலே (அவிழ்த்துவிட்டு) மேல் முதுகு மறையும்படியாக வாரிக் கடந்தம் கொத்தைப் பிழிந்து, வழி .ெ த ரி யா ம ல் தடுமாறிக் குறுக்கும் கெடுக்கும் வந்த நீங்கள் இந்த அரிய வழியை அறிவீர் களோ?' என்று அன்புடன் உசாவுபவரைப் பெற்ருல்,

மென்மெல ஒதுங்கிப் பெறின் அரிய அல்ல என்று கூட்டிப் பொருள் செய்ய வேண்டும். ஒதுங்கி என்பதை ஒதுங்க என்பதன் கிரிபாகக் கொண்டு, பெறின், பானுட் கங்குலும் ஒதுங்க அரிய அல்ல என்று கூட்டிப் பொருள் உரைப்பார் பழைய உரையாசிரியர். .

1. ஈயல்.ஈசல். புற்றம்.புற்று. ஈர்ம்புறம்-ஈரமான பக்கம். இறுத்த.வந்தடைந்த

2. குரும்பி புற்றஞ்சோறு. வல்சி-உணவு. ஏற்றை. ஆண் விலங்கு. குரும்பி வல்சி என்ற அடைமொழிகளால் கரடியென்று தெரியவருகிறது.

8. தூங்கு-தொங்கும். துதிய-உறையையுடைய, வள். கூர்மையான உகிர்.நகம். கதுவலின்-பற்றுவதல்ை.

4. மதன்.வலிமை. பால் நாள்-நாளில் பாதி; என்றது கடு யாமத்தை. கங்குல். இரவு.

5. அரிய அல்ல.அரியவை அல்ல; செல்லும் செய்கை கள் பலவகையாக இருத்தலால் அரிய என்று பன்ம்ை யாகச் சொன்னுள். மன்: உறுதியை உணர்த்தியது. சொல்லுவாரில்லே யென்ற கழிவிரக்கத்தைக் குறித்ததாகப் பழைய உரைகாரர் சொல்வர். இகுளே.தோழியே.

6. கேழல்-காட்டுப் பன்றி. அட்ட-கொன்ற. பேழ் வாய்-ஆழமான வாயையுடைய. கேழல் அட்ட என்ற 6 تانگے۔%DL

108