பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப மலே

・ヘートヘヘヘヘヘ・・・・-、卒rヘヘヘヘヘヘ.ー → ヘ・.ゃい

S AAAAAA SAS A SAS SSAS SSAS SSAS SSASAAA AAAS S AAAAAS

தாதவின் புணர்ச்சியின் கிமித்தமாகிய உரிப் பொருளாயிற்று. -

இரவிலே காட்டில் நிகழும் இத்தனை நிகழ்ச்சிகளையும் தலைவி அறிந்திருக்கிருள். ஆதலின் நாம் இவளைத் தேடி வரும்போது இந்த இடையூறுகளைத் தாண்டி ஊறுபாடின்றி. வரவேண்டுமே என்ற அச்சம் இவளுக்கு இருக்கும் ' என்ற எண்ணமும் தலைவனுக்கு உண்டாகும்படி இக்கூற்றுச் செய்கிறது.

ஒரு பக்கம் புற்றெழுந்த இடத்தில் காடியும் பாம்பும் காட்சி தரவும், மற்ருெரு சார் புலி கேழலே அடுதலும் அட்டு இழுத்துச் செல்லு தலுமாகிய செயல்கள் நிகழவும், வேறுெரு சார் களிறு குழியில் விழுந்து பிளிறப் பிடி மரத்தை ஒடித்துப்போட ஒரே ஆரவாரமாக இருக்கவும் எம்மருங்கும் அஞ்சுவதற்குரிய சூழலாக மலேச் சாரற் காட்டைப் புலவர் காட்டுகிரு.ர்.

இதனேப் பாடியவர் பெருங்குன்றுக் கிழார். அவருடைய இயற் பெயர் இன்ன தென்று தெரியவில்லை. இது அகநானூற்றின் எட்டா வது பாட்டு.