பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரைக் கண்டேன். '

நிறைய மேய்ந்து மடி நிறையப் பால் ததும்பப் பசு மாடுகள் மாலையில் வந்துவிட்டன. தலைவி அந்தக் காட்சியைக் காணும் போது அவள் உள்ளம் வருந்துகிறது. கன்றையும் பசுவையும் கண்டு வருந்தவில்லை. அவற்றின் நிலையோடு தன் கிலேயை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண் டாள். அப்போது அவளுக்குத் து ய ர ம் பெருகியது. - - v

அவளுடைய காதலன் வெளி நாடு சென் றிருக்கிருன் இல்லறத்துக்கு இன்றியமையாத பொருளே ஈட்டும் பொருட்டுச் சென்றிருக் கிருன். இல்லறத்துக்குரிய கடமைகளை ஆற்றிக் கொண்டு காதலி வீட்டில் இருக்கிருள். சென்ற காதலன் கார் காலம் வந்தவுடன் நான் வந்து விடுகிறேன் என்று சொல்லிச் சென்ருன். பசு மாடுகள் வயிறு நிறைய மேய்ந்து குறித்தகாலத் தில் கன்றை அழைத்துக்கொண்டே வந்துவிட் டன. தலைவனும் தான் ஈட்டவேண்டிய பொருளே ஈட்டிக்கொண்டு உரிய காலத்தில் காதலியை நாடி வரவேண்டியவன் அல்லவா? மாலே வந்து விட்டது; பசு மாடுகள் வந்துவிட்டன. அது போலக் கார் காலம் வந்துவிட்டது; காதலனும் வந்துவிட்டான் என்று சொல்வதற்கில்லையே! இது தான் தலைவி விருத்தத்தை அடைவதற் குரிய காரணம்.

121