பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரைக் கண்டேன்’

3. ஈயல் மூதாய்-இந்திரகோபப் பூச்சி. வரிப்ப.ஊர்ந்து செல்ல; ஊரும்போது வரிவரியாகச் சுவடு உண்டாவதகுல் வரிப்பு என்ருர்,

4. மிடைந்தன்ன-கலந்து செறிந்தது போன்ற ; மிடைங் தது அன்ன என்பது இப்படி விகாரமாயிற்று. கவைஇயசூழ்ந்த,

3-4, ஈயல் மூதாய் பவளம் போலச் சிவந்த கிறம் உடையது. இது கார்காலத்தில் முல்லை கிலத்தில் ஊர்வ தென்பதை, ' கண்பெயல் எழிலி, அணிமிகு கானத்து ஆன்புறம் பரந்த, கடுஞ்செம் மூதாய் ' (362 : 3-5) என்று நற்றிணையிலும், தண்பெயல் பொழிந்த பைதுறு காலேக், குருதி உருவின் ஒண்செம் மூதாய், பெருவழி மருங்கிற் சிறுபல வரிப்ப்' (14:3-5) என்று அகநானூற்றில் வேறிடத் திலும் வந்திருக்கும் பகுதிகளால் உணரலாம்.

கார்காலத்தில் காயாம்பூக்கள் உகிர்ந்து கீழே இறைந்து கிடக்க ஈயல்மூதாய் அவற்றினூடே ஊரும்போது மணியும் பவளமும் கலந்து கிடந்தது போன்ற தோற்றத்தை அளிப்பதாக இங்கே கூறினர். புலவர். இப்படியே அக நானூற்றில் வேறு பாடல்களிலும் இந்தக் காட்சியும் உவமையும் வந்திருக்கின்றன: 4 மணியிடை பவளம் போல அணிமிகக், காயாஞ் செம்மல் தாஅய்ப் பலஉடன், ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்பப், புலன்அணி கொண்ட கார் எதிர் காலை' (804:13.6); பெயல்பெய்து கழித்த பூநாறு வைகறைச், செறி.மணல் கிவந்த களங்தோன்று இயவிற் குறுமோட்டு மூதாய் குறுகுறு ஒடி, மணிமண்டு பவழம் போலக் காயா அணிமிகு செம்மல் ஒளிப்பன மறையக், கார்கவின் கொண்ட காமர் சோல்ே ' 374 : 10-15.) *" -

5. அம்-அழகிய ஆரிடை : அரு இடை ; இடை-இடம், மடப்பினே-மெல்லிய பெண்மான். கழிஇ-தழுவி ; உடன் கொண்டு.

133