பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AASAASAASAASAASAASAASAASAASAASAASAAMAMA SAMAAASAASAASAASAASAASAASAASAAAS

இன்ப மலே

தலைவன் தலைவியைப் பிரிந்திருக்கும் போது தலைவிக்குத் தாதாகப் பாணன் செல்வதுண்டாதலின், இங்கே பாணன் தலைவ னிடம் போகப் புறப்பட்டான்.

இந்தப் பாட்டு முல்லைத் திணேக்குரியதாக லின் செங்கிலம், முல்லை வியன்புலம் என அதற். குரிய நிலம் வந்தது. காயாவும் முல்லையும் மலருங் கால மென்றதல்ை கார்காலமும், மாலை யும் உள்ளார் என்று மாலையும் வந்தன; இவை முல்லைக்குரிய பெரும் பொழுதும் சிறு பொழுது மாகும். காயாம்பூ, குறும்பொறை மருங்கின் நறும்பூ எனப் பூவும் , மடப்பினே, இரலை, நல்லான், கன்று என விலங்கும்; கோவலர் என மக்களும் ஆகிய கருப் பொருள்கள் வங்தன. ஊரன் தேர்வர மனையோள் அது காறும் பொறுத்திருத்தலின் இருத்த லென் லும் உரிப்பொருள் வந்தது. -

இதைப் பாடின புலவர் ஒக்கூர் மாசாத்தனுர், இது அகநானூற்றில் 14-ஆம் பாட்டு.