பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

கடவுளின் புகழைச் சொல்ல வேண்டுமானுலும் இவ்வுாறு சார்த்து வகையால் அமைப்பதே அகப் பொருளுக்குரிய மரபு. ஒருவருடைய பெயரையும் புகழையும் சார்த்திச் சொல்லும் பாடல்களில் அவரைப் பாட்டுடைத் தலைவர் என்றும், பாட்டில் வரும் தலைவனைக் கிளவித் தலைவன் என்றும் சொல்வது மரபு. பாட்டுடைத் தலைவனேயே கிளவித் தலைவனுக வைத்துப் பாடில்ை அது அகத்துறையாகாது; புறத்துறை யாகிவிடும்.

மாணிக்கவாசகர் பாடிய திருச்சிற்றம்பலக் கோவை யாரில் நடராஜப் பெருமானுடைய புகழ் ஒவ்வொரு பாட்டிலும் வருகிறது. அவரைப் பாட்டுடைத் தலைவ ாக வைத்துப் பாடுகிறரே யன்றிக் கிளவித் தலைவ ராகப் பாடவில்லை. அதாவது நடராஜப் பெருமான் மேல் ஒரு தலைவி காதல் கொண்டதாகப் பாடவில்லே. அதனல் அக் கோவை அகப்பொருட் கோவையாக விளங்குகிறது. ஆனல் தேவாரத்திலும் திவ்யப் பிரபந்தத்திலும் கடவுளேயே நாயகனாகவும், பாடுவார் தம்மை நாயகியாகவும் வைத்துப் பாடிய பாடல்கள் அகப்பொருட் பாடல்கள் அல்ல. அவை: யாவும் புறப்பொருளின் பகுதியாகிய பாடாண் கிணே யைச் சார்ந்தவை. இந்த நுட்பமான வேறுபாடு தமிழுக்கே உரிய சிறப்புக்களில் ஒன்று.

ப் புத்தகத்தில் உள்ள அகத் துறைப் பாடல்கள் நான்கிலும் அவ்வத் திணைக்குரிய முதல் கரு உரிப் பொருள் கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. அவற்றை விளக் கத்தில் காணலாம். இயற்கையின் அழகை விரித்துரைப் பதற்குரிய வாய்ப்பைப் புலவர்கள் உண்டுபண்ணிக் கொள் கிருர்கள். இப்புத்தகத்தில் உள்ள இரண்டாவது பாட்டு, தலைவனேப் பார்த்துத் தோழி' பேசுவதாக அமைந்திருக்

11