பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* AMMMMAMMJMMMJM AAASAASAASAASAASAASAASAASAASAASAASAAMSMSJAJAMeSeMMM MMeMeMMMM

மணிமிடற் றந்தனன்

களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களைப் பகைவர் போல வைத்து ஒறுத்தல் அவனுடைய அருளுக் குரிய இயல்பு. அப்போது பயன்படுவன மழு முதலிய கருவிகள். அப்பெருமான் கையிலே கணிச்சியும் மழுவும் இருப்பதோடு முத்தலைச் சூலமும் இருக்கிறது. இறைவனிடம் உள்ள படைகளில் இதுவே சிறந்தது. சூலதான் என்று அப்பெருமான் பெயர் பெருக வழங்கும். சில சமயங்களில் தெய்வங்களே அவர்களுடைய படைகளில் ஆவாகனம் செய்து வழிபடுவது உண்டு. வேலே கட்டு, அதனேயே முருகனுக எண்ணி வழிபடுவது பழங்கால முதல் இருந்து வரும் வழக்கம். அப்படியே சூலத்தில் சிவபெரு மானே ஆவாகனம் செய்து வழிபடுவதும் உண்டு. ஆதலால் சிவபெருமானுடைய திருக்கரத்தில் உள்ள படைகளில் சூலம் சிறந்தது என்று தெரியவருகிறது. அது பற்றியே சூலத்தைச் குலதேவர் என்று உயர்வாகச் சொல்லும் மரபும் உண்டாயிற்று.

சூலமும் ஒருவகை வேல்தான். வேலுக்கு ஓர் இலை உண்டு; சூலத்துக்கு மூன்று இலை கள் உள்ளன. ஆதலின் அதை மூவிலைவேல் என்று கூறுவர்; திரிசூலம் என்பது வடமொழி வழக்கு. மூன்று வாய்களை உடைய வேல் அ.தி.

28