பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AAMMMMAMMMMMSASASMMAMMAMAMAMMS

மணி மிடற் றந்தணன்

முதிர்ந்த பின்னர் நிகழும் தேய்வும் அதற்கு இல்லை. -

இறைவன் சென்னியிலே சடை நெருப் பின் கொழுந்துபோல விளங்குகிறது; அதனேடு முதிராத் திங்களோடு அச் சென்னி ஒளி விடுகிறது. - -

முதிராத் திங்களொடு சுடரும் சென்னி. e முதிராத திங்களாகிய பிறையோடு ஒளிவிடும் திரு முடியையும்.

முதிராத் கிங்கள் என்றதனுல் பிறை என்று கொள்ள வேண்டும். கிங்கள் இருப்பதல்ை அதன் சுடரும் சேர்ந்து சென்னி விளங்குகிறது. )

★ சிவபெருமான் தன் கருணேயால் மெய்ஞ் ஞானிகளாகிய அருளாளர்களுக்கு இவ்வாறெல் லாம் உருவம் கொண்டு முன் நின்று அருள் செய்கிருன். அவன் அருளே கண்ணுகக் கண்ட பெரியோர்கள் தாம் கண்ட காட்சியை ஏனையோர்க்கு எடுத்துச் சொன்னர்கள். அவர் களுடைய அநுபவத்தை ஆதாரமாகக் கொண்டு இறைவனுக்குத் திருவுருவங்களும் அவற்றை வைத்து வழிபடும் கோயில்களும் உண்டாயின. அவை எழுந்தாலும் கடவுளே முற்றக் கண்டவர் யாரும் இல்லே. கடலில் ஒரு துறையில் மூழ்கின வர், ' கடலில் ஆடினேன்” என்று சொல்விப் பெருமைப் படலாம். ஆல்ை கடல் முழுவதையும்

31