பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

சிங்க நூல்களில் எட்டுத்தொகை என்னும் வரிசையில் ஒன்ருகிய அகநானூறு அகப்பொருள் பற்றிய கானு று செய்யுட்களை உடையது. இதனே அகமென்றும், அகப் பாட்டென்றும் சொல்வது உண்டு. பல புலவர்களின் ஆகத் துறைப் பாடல் தொகுதிகளாகிய குறுக்தொகை, நற்றினே, அகநானூறு என்ற மூன்றில் அடியளவில்ை மீண்ட பாடல் களே உடையதாதலால் இதற்கு நெடுந்தொகை என்ற பெயரும் வழங்கும். பதின்மூன்றடி முதல் முப்பத்தோாடி வரையில் அமைந்த பாடல்கள் இந்தத் தொகை நூலில் இருக்கின்றன. இதற்கும் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பெருந்தேவனுர் இயற்றிச் சேர்க்கிருக்கிறர். அது அகப் பாட்டாகிய கானுாற்றில் அடங்காதது. அதையும் சேர்த்தால் அகநானூற்றின் பாடல் தொகை 401 ஆகும்.

இந்தத் தொகையைத் தொகுக்கும்படி செய்தவன் உக்கிரப்பெருவழுதி என்னும் பாண்டிய அரசன். அவன் விருப்பத்தின்படி இதனை ஒழுங்குபடுத்தித் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடிகிழான் மகர்ை உருத்திரசன்மர். இறைய ாைகப்பொருளுக்குச் சங்கப் புலவர்கள் பலர் எழுதிய உரைகளைக் கேட்டு அவற்றில் நக்கீரர் உரை சிறந்ததென்று நிறுவியவர் இவர் என்றும், பிறவி ஊமை யென்றும், முருக னுடைய அமிசம் உடையவரென்றும் ஒரு வரலாறு வழங்கு கிறது. இ. -

அகநானூற்றை மூன்று பகுதிக்ளாகப் பகுத்திருக்கிருர் கள். முதல் நூற்றிருபது பாடல்களேக் களிற்றியானதிரை என்றும், அவற்றின் பின் உள்ள நாற்றெண்பது பாடல் களே மணிமிடையவளம்" என்றும், கடைசியில் உள்ள நூறு

1