பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிமிடற் றத்தனன்

என்ற சொல்லுக்கு அழகிய தட்பத்தை உடை யார் என்று பொருள் விரிப்பர் பரிமேலழகர். தட்பம் என்றது அருளே. தன்பால் சிறிதளவு அன்பு செய்தாலும் அவர் செய்த பழைய குற் றங்களை மறந்து அருள் செய்தலால் தட்பத் தைப் பின்னும் சிறப்பித்து அந்தண்மையாக்கி அந்தணன் என்ருர் அளிவந்த அங்கனனே' என்பது திருவாசகம்.

அந்தணன் என்பதற்கு முனிவன் என்றும் ஒரு பொருள் உண்டு. தவக் கோலத்துக்குரிய ஆடையணிகளே உடைமையால் சிவபெருமானே 'அருந்தவத்தோன் என்று புறநானூற்றின் கடவுள் வணக்கத்தில் பெருந்தேவனர் கூறி னர். ஆதலினல் இங்கே அந்தணன் என்ப தற்கு தவஞ் செய்யும் முனிவனுடைய திருக் கோலத்தை உடையவன் என்று சொல்வதும் பொருத்தமாக இருக்கும்.

கடவுளரில் சிவபெருமான் அந்தணன் என்றும் ஏனைய கடவுளர் அரசன், வணிகன், வேளாளன் என்ற மரபோடொக்கநிற்பவரென் அறும் கூறுவாரும் இருக்கின்றனர். அவர் கொள்கையின்படி சிவபெருமான் கால்வகைப் பிரிவில் முதலில் கிற்கும் அந்தணன் என்று பொருள் கூறுவதும் உண்டு.

யாழ்கெழு மணிமிடற்று அந்தணன்,

37