பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SSASAS AAA AA SAASAASSAAAAAASMAMMAMAAMMAMMMAeMSMMAMMSAMAS AAMMMAeAAAS

இன்ப மலே

பினும், அவன் அருளே கண்ணுகக் கண்ட பெரியோர்களுக்கு அவன் உருவுடையவனகி எழுந்தருளுவான் என்பதும், அவ்வாறு எழுங் தருள்வது உருவத்தையே பற்றுக் கோடாகப் பற்றி நினைக்கும் மனத்தை உடைய ஆருயிர் களுக்கு அருள் செய்யும் கிமித்தம் என்பதும் குறிப்பாகப் புலப்பட்டன. அவன் திருவுருவச் சிறப்பைச் சொல்லும் வாயிலாக அவன் திரு முடியையும் அதில் உள்ள கண்ணி சடை பிறை ஆகியவற்றையும், அவன் திருதுதலேயும் அதில் ஒளிரும் இமையா நாட்டத்தையும், திருக் கழுத்தையும் அதில் உள்ள நஞ்சையும் அதில் எப்போதும் இசைக்கும் சாமகீதத்தையும், அவன் புன்முறுவலையும், அவன் திருமார்பை யும் அதன் கண் உள்ள தாரையும் பூணுாலே யும், அவன் அணிந்த புலித்தோலாடையையும், அவன் திருக்கரங்களையும் அவற்றில் உள்ள கணிச்சி மழு சூலம் என்பவற்றையும், மாதிருக் கும் பாதியையும், இடப வாகனத்தையும் எடுத் துச் சொல்கிருர் புலவர். இத்தகைய அந்தண னது திருவடி கிழலின் கீழே உலகத்து உயிர் கள் யாவும் தங்கள் வாழ்க்கையை நடத்தித் தங்குகின்றன என்று முடிக்கிருரர்.

நாம் தங்கி வசிப்பதற்கு ஒரு வீடு இருக் கிறது. அது ஒரு தெருவில் இருக்கிறது.

40