பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்ப மலே ..ہ .> یہ ہے۔

கவ்வின; உள்ளம் ஒன்றுபட்டன. பிறவி தோறும் வந்துள்ள தொடர்பாதலின் காங் தமும் இரும்பும் ஒன்றுபட்டதுபோல அவ்விரு வரும் ஒன்றுபட்டனர். பகற் காலத்தில் காதலி தினேப்புனம் காக்க வருவாள். அப்போது காதலனும் அங்கே வந்து காதலியைக் கண்டு அளவளாவிவிட்டுச் செல்வான். இந்த இரண்டு காதலர்களுக்கும் உறுதுணேயாகக் காதவியின் கோழி இருந்தாள். காதலியின் இன்ப துன்ப உணர்ச்சிகளே உணர்ந்து காதலனிடம் குறிப் பாக அவற்றை எடுத்துரைக்கும் திறமை அந்தத் தோழியிடம் இருந்தது.

இந்தக் களவுக் காதல் நிகழ்ந்து கொண்டு வந்தபோது காதலனும் காதலியும் உலகையே மறந்து எதிர் காலத்தையும் மறந்து காதல் உலகத்தில் உலவினர். தோழிக்கு மாத்திரம் எதிர்காலத்தைப் பற். றிய கினேவு இருந்துகொண்டே இருந்தது. தன்னுடைய தலைவி தன் உள்ளத்துக்கு இசைந்த காதலனைப் பெற்றது பற்றி அவளுக்கு அளவற்ற உவகை உண்டாயிற்று. அது நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை யும் அவள் உணர்ந்தாள். ஆல்ை உலகம் இந்தக் காதற் பயிர் வளர்வதற்குத் துணேயாக இருக்கவேண்டுமே !

49