பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@ ira ಶಿನ

தினைப்புனத்தில் ஒவ்வொரு நாளும் காதலர்கள் சந்தித்தார்கள். ஆனல் இந்தச் சந்திப்பு எத்தனை நாளேக்கு நீட்டிக்கும் ? தினேப் பயிர் விளைந்துவிட்டால் கதிர்களே அறுத்து விடுவார்கள். பிறகு அங்கே காவல் வேண்டியதில்லை. தலைவிக்கு அவ்விடத்தில் வேலை இல்லாமற் போய்விடும். • *

தினைப்புனம் காக்கும் வேலே உள்ளவரை யில் தலைவன் பகற் காலத்தில் தலைவியைக் கண்டு பேசி அளவளாவ இயலும். அந்தக் காவல் கின்றுவிட்டால் தலேவி வீட்டோடு இருக்க வேண்டியவளே. தினேப்புனத்தில் காதலர் இருவரும் சந்திப்பதற்கு வசதிகள் இருந்தன. தலைவி வீட்டுக்குப் போய்விட்டால் அவர்கள் எவவாறு சந்திக்க முடியும் ? பகலில் சந்திப்பதென்பது மனத்தாலும் கினைப்பதற்கு உரியதன்று. இரவிலோ கட்டுக் காவலேக் கடந்து இருவரும் சந்திப்பது எளிதன்று. ‘என்ன செய்தால் நல்லது?’ என்ற சிந்தனையில் தோழி ஆழ்ந்தாள். இந்தக் களவுக் காதலே விட்டுவிட்டுத் திருமணம் செய்து கொண்டு கண வன் மனேவியாக வாழ்வதுவே எல்லாவற்றிற் கும் மேலானது. அதுவே அச்சம் அற்ற வாழ்க்கை, அறம் கிநம்பிய வாழ்க்கை என்ற முடிவுக்கு அவள் வந்தாள். -

50