பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரும் தேரும்

கார் காலம் வந்தது.

வருவார் வருவார் என்று தம்மைப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து தம் இல்லிலே இருந்து கடமையாற்றும் காதலிமாரின் அகத் திலே உவகையும் முகத்திலே முறுவலும் தழைக்கக் கார் காலம் வந்தது. - - காதலர் தம் காதலியரைப் பிரிந்து செல்லுவதற்குக் காரணம்ான செயல்களே கிறை வேற்றி விட்டுத் தம் காதலியரைக் காணும் அவாவோடு மீள்வதற்கு உரிய காலம் அது.

வெம்மை கிறைந்த காலத்தில் வெம்மை யான நிலத்தைக் கடந்து வெம்மையான வறுமையையும் பகையையும் போக்க எண்ணித் தலைவியருடைய உள்ளம் வெதும்பத் தம் உள்ள மும் வெம்மை பெறப் பிரிந்து சென்றவர்கள் மழையால் நிலம் குளிர்ந்து வளம்பெறக் காடு கவின்பெறத் தம் முயற்சி நிறைவுபெற வீடு நலம்பெற மீண்டு வரும் காலம் அது.

கார்காலம் எங்கும் அழகைச் செய்திருக். கிறது. காடு முழுவதும் கண் கொள்ளாக் காட்சி. ஆவி இடி மின்னல் ஆகியவை யெல் லாம் சேர்ந்து தொகுதியாக வுள்ள மேகங்கள்

65