பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

MM SMAMAAAA SASAASAAAAASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS S S AAAA S

இன்ப மலே

AASAASAASAASAASAASAAASMS MMAMMS MMJMMAAA S »..- , , , , , , ۰.م -، ۰ - . . . . یا...- ...،

திட்டமிட்டுச் சொல்வது முடியாதாம். அமாரும் முனிவரும் பிறரும் அறியாத தொன்முறை மரபாம் அது. இறை வனுடைய அருள்மயமாகிய தாளின்கீழ் உயிர்க் கடட்டன் களெல்லாம் எப்போதும் இருந்து வாழ்கின்றன.

சங்ககாலத்துத் தமிழர்கள், அடியார்களுக்கு இரங்கி ஆண்டவன் திருக்கோலங் கொண்டு எழுந்தருளுகிறன் என் பதையும், அப்படி அங்க அடையாளங்களைச் சுட்டிக் கூறு வதற்குரியவகை அவன் இருப்பினும் அவன் இயல்பு முற்றும் உணர்தற்கரியது என்பதையும், இறைவனுடைய அருளிலே எல்லா உயிரும் வாழ்கின்றன என்பதையும் உணர்ந்திருந்தார்கள் என்பதற்கு இந்தக் கடவுள் வாழ்த்து ஒரு தக்க சான்று.

★ றைவன் கருணேயை நினேங்து அன்பு செய்யும் தமிழ்ர்கள், உலகில் வாழ வேண்டிய வகையில் வாழ்ந்து வந்தார்கள். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் வளர்த்தார்கள். இல்வாழ்க்கையின் பயனே அறம் என்று எண்ணினர்கள். அதற்குப் பொருள் வேண்டுமாதலின் அதனே நல்வழியில் ஈட்டினர்கள். அறத்தினின்றும் பிறழாக வகையில் பொருளின் உதவியால் இன்பம் துய்த்தார்கள். காதலின்பத்தைத் துய்ப்பதில் இரண்டு நிலைகளே அகப் பொருட் பாடல்களிலே பார்க்கிருேம். அவற்றைக் களவென்றும் கற்பென்றும் சொல்வார்கள். காதலனும் காதலியும் கல்லுழின் வன்மையால் முன்பின் அறியாதவர் களாயினும் ஓரிடத்தில் சந்தித்துக் காதல் கொள்கின்றனர் இந்தச் சந்திப்பு இயற்கையாக, ஒருவருடைய முயற்சியும் இன்றி நிகழ்வதாதலின், இதனே இயற்கைப் புணர்ச்சி என்று சொல்வார்கள். ஒருவருடைய முயற்சியும் இல்லாவிட்டா தும் காதலன் காதலியரிடையே வேறு வகையில் தொடர்பு

4