பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gశra ఓు

த லே வ னு க்கு ள்ள ஜீவகாருண்யத்தின் சிறப்பை வலவன் தெரிந்து கொண்டு வியப்பே மயமானன். ஆல்ை மறுபடியும் அவனுக்கு ஒர் ஐயம் தோன்றிற்று.

‘ நீங்கள் நினைப்பது சரிதான். வண்டினங் களின் இன்ப வாழ்வைக் குலைப்பது தவறு; பாவம். ஆனல் கம்முடைய தேரின் ஒசையும் குதிரைகள் ஒடும் . ஒசையும் வண்டுகளைப் பேதுறச் செய்யாவா?' என்று வலவன் கேட் டான்.

  • நல்ல கேள்வி! நான் அதை நினைக் காமலா இருப்பேன்? காடு என்பது ஓசை ஒலி களே இல்லாத தனிமோன ராஜ்யம் அல்லவே? அங்கே மரங்கள் காற்ருல் அசைகின்ற ஒலியும், விலங்கினங்களின் முழக்கமும், பறவைகளின் ஓசையும், மான் முதலியவை ஒடும் சத்தமும் இருக்கின்றன. அந்த ஒலிகளினிடையேதான் வண்டுகள் தேனே நுகர்ந்து இன்புறுகின்றன. அவை காட்டு ராஜ்யத்துக்குரிய ஒசைகள்; - வண்டுகளுக்குப் பழக்கமான ஓசைகள். அவற் றைக் கேட்டு அவை அஞ்சுவதில்லை. தேர் ஒடும் ஒலியும் குதிரையின் குளம்பொலியும் அந்த ஒசைகளைப் போலவே இருக்கும். ஆகையால் அவற்றைக் கேட்டும் வண்டுகள் அஞ்சா. ஒசையே இல்லாமல் இருக்கவேண்டும் என்பது

80