பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரும் தேரும்

என் நோக்கம் அன்று. வண்டுகளின் காதில், கணிரென்று விழும் புதுவகையான ஓசை விழவேண்டாம் என்ற எண்ணத்தால்தான் மிணி யின் ஓசையை விலக்க கினைத்தேன். அந்த ஒசைதான் நெடுந்துராம் சென்று கிண்னென இயம்பும். வண்டுகள் முன்பு கேளாத ஓசை அது. துணையொடு வதிந்த தாது உண் பறவை களாகிய அவற்றைப் பேதுறச் செய்யும். நான் பிரிந்து சிலகாலம் இருந்தவன்; இப்போது என் காதலியோடு சேரப் போகிறேன். இந்த கிலே யில் தம் துணேகளோடு ஒன்றியிருக்கும் வண்டு

களைப் பிரிக்கும் செயலைச் செய்யலாமா ?”

வலவன் தலைவனுடைய பேரன்பையும் நுண்ணறிவையும் அறிந்து வாய்பேச இயலாமல் கின்றுவிட்டான். தலைவனுக்குத்தான் எத்தனே கூரிய அறிவு! இப்படி யெல்லாம் நடக்கும், இதற்கு இப்படிப் பாதுகாப்புச் செய்யவேண் டும் என்று ஆராய்ந்து செய்கிருனே ! உயிர் களிடத்தில் அவனுக்கு உள்ள அன்புதான் எவ்வளவு சிறந்தது குதிரையை வருத்தக் கூடாது என்கிருரன். வண்டுகளின் இன்பத் துக்கு இடையூறு செய்யக்கூடாது என்கிருன். அவனுடைய அருள் தன்மையை வலவன் வியங் தான். பிற உயிர்களின் இன்பத்தை எண்ணி வாழும் மகனுக்கு, வேண்டிய இன்பம் எளிதிலே

81