பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

SMMAMMMAMMMAMMMAAASAASAASAASAASAAMeAS AMMeSeMSMMSMS SMSSSS

இன்ப மலே

ASAMMMAMAeMAMMMJSeMeeAAASSSAAASSSAAASSSAAASeeeMS SSAS SSAS SSAS

காலத்தில் இன்பம் ஒன்றே காதலர்களின் தனி நோக்கமாக இருக்கும்.

அகத்துறையில் களவு, கற்பு என்னும் இரண்டு கை கோள்கள் உள்ளன. அவற்றில் களவுக் காதல் செய்பவர் கள் பின்பு மணந்து கொள்வார்கள். முதலில் களவொழுக் கத்தில் ஈடுபட்டு அப்பால் திருமணம் செய்துகொண்டு இல் வாழ்க்கையாகிய கற்பொழுக்கத்தை மேற் கொள்வதைக் களவின் வழிவந்த கற்பு என்று சொல்வார்கள். களவுக் காதலின்றிக் கல்யாணம் செய்து கொண்டு கணவன் மனேவியராக வாழும் கிலேயைக் களவின் வழி வாராக் கற்பு என்பர். இந்த இரண்டு வகையிலும் களவின் வழி வந்த கற்பே சிறப்புடையது என்று தமிழர்கள் கொண்டார்கள். வேதத்தில் எட்டுவகை மணங்கள் கூறப்பெறுகின்றன. அவற்றில் ஒன்ருகிய காந்தர்வ மணம் என்பதைப் போன் மது களவுக் காதல். தலைவியின் தாய் தந்தையரும் உலகத் தாரும் அறியாமல் காதலர் இன்புறுவதல்ை அதனேக் களவு என்று சொன்னர்கள். மறைவாக கிகழ்வதனல் மறையுறு புணர்ச்சி என்றும் ஒரு பெயர் அதற்கு அமைக் திருக்கிறது. பிறருக்குரிய பொருளை அவர் அறியாதவாறு தனக்கு உரியதாக்கிக் கொள்ளும் களவு அன்று இது. மறைவான ஒழுக்கம் என்ற பொருளில் களவு என்ற பெயர் வக்தது. - r

தமிழ் இலக்கணத்தைப் பழங்காலத்தில் எழுத்து, சொல், பொருள் என்று மூன்ருகப் பகுத்துக் கூறினர்கள். இந்த மூன்றில் பொருளிலக்கணம் சிறந்தது. அது அகப்பொருள், புறப்பொருள் என்ற இரண்டு பகுதிகளே உடையது. அந்த இரண்டிலும் அகப்பொருள் சிறந்தது. அகப்பொருள் களவு, கற்பு என்ற இரு வேறு பிரிவுகளைப் பெற்றது. அந்த இரண்டில் களவு சிறந்தது. தமிழுக்கே உரியது இந்தக் களவுக் காதல் என்று சொல்வார்கள். களவுக்