பக்கம்:இன்ப வாழ்வு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

103


அவ்வூரார் அனைவரும் ஆடியும் பாடியும் உண்டும் உடுத்தும் பெரிதும் மகிழ்ச்சியடைவார்கள் என்பது திண்ணம். அம் மகிழ்ச்சி எத்துணை சிறப்பும் பெருமையும் உடையதோ, அத்துணை மகிழ்ச்சி காதலருடன் கூடி வாழும் போது எனக்கும் இருக்கும் என்பது உறுதி. காதலர் பிரிந்து விட்டாலோ, அவ்வின்பத்திற்கு மாறாகத் துன்பம் வந்து தோயும். அத்துன்பத்திற்கு ஆட்பட்ட இரங்கத்தக்க என் நிலைமையை எங்ஙனம் கூறி விளக்குவது?

“ஒரு வறண்ட பாலை நிலம். அதன் நடுவில் ஒரு சிற்றுார். பாலை நிலத்தின் வறட்சியால் குடி தண்ணீரும் கிடைக்கவில்லை. வெப்பமும் தாங்க முடியவில்லை. கொள்ளைக் கூட்டத்தினரும் அடிக்கடி வந்து தாக்கு கின்றனர். இந்நிலையில் அவ்வூர்க் குடிமக்கள் எங்ஙனம் வாழ முடியும்? அனைவரும் அவ்வூரை விட்டு வெளியேறி வேற்றுரை அடைந்தனர். ஆதலின் அவ்வூரில் உள்ள வீடுகள் பழக ந்தன. வீடுகளின் முற்றங்கள் பொலி விழந்தன. மக்கள் பயிலாமையால் முற்றங்களில் அணில்கள் பயின்று எஞ்ஞான்றும் விளையாடிக் கொண்டிருக்கத் தொடங்கின. அத்தகைய அணிலாடும் முன்றிலையுடைய தனித்த வீடுகள் எங்ஙனம் பொலிவிழந்து காணப்படுமோ, அங்ஙனமே யானும் காதலர் பிரிந்தபோது பொலிவிழந்து காணப்படுகின்றேன்” என்று கூறி ஏக்குற்றாள். இந் நிகழ்ச்சியை

‘காதலர் உழைய ராகப் பெரிதுவந்து

சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற அத்தம் கண்ணிய அங்குடிச் சீறுார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/104&oldid=550671" இலிருந்து மீள்விக்கப்பட்டது