பக்கம்:இன்ப வாழ்வு.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இன்ப வாழ்வு


மேலும், அணில் ஆடுவதுங்கூட, வீட்டின் கூரையிலோ அல்லது கொல்லைப்புறத்திலோ இன்றி, மக்கள் பயிலும் முன்றிலில் நிகழ்வதாகக் கூறியிருப்பதன் நயம் குறிப்பிடத்தக்கது. எனவே, இங்ஙனம் இடமறிந்து சொற்களைப் பெய்து பாடிய திறமையால் பெயர் பெற்ற புலவர் இவர் என்பது இனிது விளங்கும்.

ஆகவே, அணிலாடு முன்றில் என்பது ஒருர்; அவ் வூரில் பிறந்த காரணத்தால் இப்புலவர் இப்பெயர் பெற்றார் என்றும் கூறமுடியாது. அல்லது இவர் வீடு அணிலாடு முன்றிலையுடையது; அக்காரணத்தால் இப்பெயர் பெற்றார் என்றும் கூறமுடியாது.

இப்புலவர் இயற்கைப் பொருள்களையும் இயற்கை நிகழ்ச்சிகளையும் கூர்ந்து நோக்கி ஆராயும் இயல்புடையவர் என்பதும், இயற்கை இன்பத்தில் தோய்ந்து திளைப்பவர் என்பதும் இச்செய்யுளால் இனிது பெறப்படும்.

பொய்தானும் இல்லையிது பொருத்தமே தெய்வத்தை வைதாலும் தமிழினால் வாழவைக்கும் அம்மானை வைதாலும் தமிழினால் வாழவைக்கும் என்பதுதான் மெய்தான் ஏனின்தமிழ்க்கு மேன்மையன்றோ அம்மானை தமிழ்க்குள்ள மேன்மை தமிழர்க்கும் அம்மானை

.*ow-os

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/107&oldid=550675" இலிருந்து மீள்விக்கப்பட்டது