பக்கம்:இன்ப வாழ்வு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இன்ப வாழ்வு


திணை

பாலைத்திணை. பிரிவைப்பற்றி கூறியிருத்தலின் இச்செய்யுள் பாலைத்திணையாயிற்று.

துறை:

வினை முற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது. வந்த காரியத்தை முடித்த தலைவன், தான் தலைவியிடம் குறித்துவந்த கார்ப்பருவம் வந்து தோன்றிய போது தனக்குள் சொல்லியது என்பது துறைப் பொருள்.

பாடியவர்:

ஓர் ஏர் உழவனார். இப்புலவர் இச்செய்யுளில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு ஏற்புடையதாக ஓர் ஏர் உழவனை உவமைப்படுத்திக் கூறியதால், ஒர் ஏர் உழவனார் என்னும் பெயர் பெற்றார். இவ்வுவமை எங்ஙனம் சிறந்ததாகும் என்று நோக்குவோம். பெயர்க்காரணச் சிறப்பு:

இங்கு இவ்வுவமை கூறப்பட்டது, தலைவனது நெஞ்சுக்கிருக்கும் விரைவை விளக்குவதற்காம். பொதுவாக உலகில் ஒருவர் விரைந்து செல்வதற்கு உவமையாக மனோவேகம் - வாயு வேகமாகச் சென்றார் என்று கூறும் வழக்கம் உண்டு. ஏனைய பொருள்களினும் காற்று மிகவும் விரைந்து செல்லும் ஆற்றலுடையது. என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அக்காற்றைவிட விரைவு மிக்கது மனமாகும். அம்மனமானது இமைப் பொழுதிற்குள் தான் இருக்கும் ஊரைவிட்டு வேறோர் ஊரை யடையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/111&oldid=550680" இலிருந்து மீள்விக்கப்பட்டது