பக்கம்:இன்ப வாழ்வு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

111


வேறொரு நாட்டையும் அடையும். வேறொரு கண்டத்தையும் அடையும். வானுலகம் போன்ற வேறோர் உலகையும் அடையும். அடைவதோடல்லாமல் அதே இமைப்பொழுதிற்குள் திரும்பியும் வந்துவிடும் வன்மையும் உடையதாகும். இதனை ஒவ்வொருவரும் தம் பட்டறிவு வாயிலாக (அநுபவ பூர்வமாகக்) கண்டிருக்கலாம். மற்றும் இம்மனம், முருகனது விரைந்துசென்று மீளும் வேலுக்கு உவமையாகத் ‘தூரம் போய் மீளுதலால் சொல் மனமாம்” என்று “திருப்போருர்ச் சந்நிதிமுறை'யில் கூறப்பட்டிருப்பதும் இக்கருத்தை வலியுறுத்தும். எனவே மனத்தினும் விரையும் பொருள் வேறொன்றும் இலதென்பது வெளிப்படை. ஆதலின் விரைவின் மிகுதிக்கு எல்லையாக உவமையொன்று கூற விரும்பின் மனத்தையே கூறவேண்டும். அங்ஙனம் கூறுபவர் உவமையிலக்கணத்தை நன்கு உணர்ந்தவர் ஆவர். ஆனால் அத்தகைய மனமாகிய நெஞ்சின் விரைவுக்கே வேறோர் உவமை கூறப் புகுந்துவிட்டார் இச்செய்யுளில் இப்புலவர். அப்பொருத்தத்தினைச் சிறிதாய்வோம்.

உலகில் உழவர்கள் பயிர் அறுக்கப்பட்டுக் கிடக்கும் வயலை உழுதற்கு மழையை எதிர் நோக்கிக் கொண்டிருப்பது வழக்கம். அங்ஙனம் ஒரு மழை பெய்து விட்டாலோ உழவர்களிடையே ஒரே ஆரவாரம் காணப் படும். காலையில் ஞாயிறு (சூரியன்) தோன்றுவதற்குள் கலப்பையைத் தூக்கிக் கொண்டும் காளைகளை ஒட்டிக் கொண்டும் வயலை நோக்கிப் புறப்பட்டு விடுவார்கள். எங்கும் ஒரே பரபரப்புத்தான். இந்நிகழ்ச்சியை நாம் சிற்றுார்களில் (கிராமங்களில்) தெற்றெனக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/112&oldid=550681" இலிருந்து மீள்விக்கப்பட்டது