பக்கம்:இன்ப வாழ்வு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இன்ப வாழ்வு


இக்கலத்தில் நிரம்பப் பெற்றுக்கொள்வீராக!” என்று கூறினாள்.

தலைவியும் தோழியும் வாடைப்பருவத்தையும் தலைவன் வரவையும் எதிர்நோக்கிக் கொண்டிருந்தனர். ஆதலின் அவை பற்றிய நற்செய்தியை வேறொருவர் வாயிலாகக் கேட்பின் மனத்திற்குப் பெரியதோர் ஆறுதல் உண்டாகும். மேலும் முக்காலமும் அறியவல்ல துறவி ஒருவரின் வாயால் கேட்பின் இரட்டை மகிழ்ச்சி யல்லவா? அதனாலேயே தோழி இங்ஙனம் அறிவரை வினவினாள். மற்றும், தமக்கு நற்செய்தி சொல்லுவார் என்ற மகிழ்ச்சி மேலீட்டினால் அறிவர்க்கும் நன்மைவந் தெய்துவதாகுக என வாழ்த்தலானாள் இவையெல்லாம் உலக இயற்கை யன்றோ? இந்நிகழ்ச்சியை

“ஆசில் தெருவில் காய்இல் வியன்கடைச்

செங்கெல் அமலை வெண்மை வெள்ளிழுது ஒரில் பிச்சை ஆர மாந்தி அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் சேமச் செப்பில் பெlஇயரோ நீயே மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை எக்கால் வருவது என்றி அக்கால் வருவரெம் காத லோரே.’ என்னும் குறுந்தொகைச் செய்யுளால் நன்குணரலாம். குறிப்புரை: செந்நெல் அமலை = சோற்றுக்குவியல்; வெள்ளிழுது = வெண்மையான நெய், அற்சிரம் = முன் பனிக்காலம்; வெப்பத் தண்ணீர் வெந்நீர், சேமச்செப்பு = நீர்சேமித்து வைத்துக் கொள்ளும் ஒருவகைக் கலம்; மின்னிடை தலைவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/117&oldid=550686" இலிருந்து மீள்விக்கப்பட்டது