பக்கம்:இன்ப வாழ்வு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இன்ப வாழ்வு


கட்டிக்கொள்வார்கள். அம்முட்டையினையும் சுமந்து கொண்டு மேலும் மேலும் தம் தொழிலில் கண்ணும் கருத்துமாய்த் திரிவார்கள். ஒளில் பிச்சை

ஆனால், இச்செய்யுளில் கூறப்பட்டுள்ள பிச்சை அங்ஙனம் எளிய தன்று; சிறந்ததும் பெருமை உடையதும் ஆகும். அன்பு கலந்த மதிப்பிற்குரியதாகும். இச்செய்யுளில் உள்ள ஒரில் பிச்சை என்னும் தொடர்மொழி மேற்கூறிய உலகப் பிச்சைக்காரர்களின் நிலையோடு ஒத்திட்டுக் குறிக்குங்காலை பொருந்தாததாகும். ஒரில் என்பதோடு பிச்சை யென்னும் சொல்லும், பிச்சை என்பதோடு ஒரில் என்னும் சொல்லும் ஒவ்வாது மாறுபடும். இங்ஙனம் இன்றி, ஒரில் விருந்து என்றோ அல்லது ‘பலவில் பிச்சை என்றோ இருந்தாலேயே ஒன்றுக் கொன்று தொடர்புடையதாகிப் பொருந்தும். ஏன்? உலகப் பிச்சைக் காரர்களின் நிலையோடு ஒத்திட்டு நோக்குங்கால், ஒரே இல்லில் கிடைப்பது பிச்சையாகாமல் விருந்தாக வன்றோ கருதப்படும்? பல வில்லில் கிடைப்பது தானே பிச்சையாகக் கருதப்படும்? ஆனால் இப்புலவர் குறிப்பிட்டுள்ள ஓரில் பிச்சையானது ஒரில் விருந்தினையும் பலவில் பிச்சை யினையும் கடந்த தொரு தனித்தகுதி உடையதாகும். இங்ஙனம் இயைந்த இவ்ஒரில் பிச்சை என்னும் தொடர் மாழியானது, நமக்குச் சில அரும்பெரும் கருத்துக் களை அறிவித்து நிற்கின்றது. உணவு இடுபவரின் உயர்ந்த மனப்பான்மையினையும் ஏற்பவரின் ஏற்றத் தினையும் அளத்தற்குரிய அளவுகருவியாகும் இத்தொடர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/119&oldid=550688" இலிருந்து மீள்விக்கப்பட்டது