பக்கம்:இன்ப வாழ்வு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

121


பிச்சை எங்ஙனம் சிறந்ததாக முடியும்? இப்புலவர் குறிப்பிட்டுள்ள பிச்சை இன்னதன்று. செந்நெல் என்னும் உயர்தரமான அரிசியால் ஆக்கப்பட்ட உணவாகும். குறைந்த அளவின தன்று; வயிறு நிறையும் அளவாகத் திரண்ட உணவாகும், இதனைச் செந்நெல் அமலை’ (அமலை - திரட்சி) என்னும் தொடரால் புலவர் குறிப் பிட்டுள்ளார். மேலும் நிரம்ப நெய் விடப்பெறும் உணவாகும். நெய்யென்றால் பதமாகக் காய்ச்சி உருக்கப் பெற்றது; மிகவும் வெண்மையானது; எனவே புத்துருக்கு நெய் என்பது புலப்படும். இதனை வெண்மை வெள்இழுது’ (இழுது = நெய்) என்பதால் உணரலாம். நெய் கூறவே ஏனைய கறி வகைகளும் கூறாமலேயே அடங்கும். இவ்வித உணவு வயிறு நிரம்பப் படைக்கப்படுமாம். இதனை ஆர மாந்தி, என்பதால் அறியலாம். குளிரக்கூடிய முன்பனிக் காலமானதால் விடாய் (தாகம்) தீர்க்க வெந்நீர் கொடுப் பார்களாம். வெந்நீர் என்றால் பெயருக்கல்ல; குடிப்பவர் எவ்வளவு சூட்டை விரும்பிக் குடிப்பாரோ அவ்வளவு சூடாகக் கொடுப்பார்களாம். இதனை வெய்ய வெப்பத் தண்ணீர் என்பதால் உணரலாம். வெய்ய என்பதற்கு விரும்பத்தக்க என்பது பொருள். இப்போது கொடுப்பதோ டமையாமல், பின்னும் உதவும்படியாக அவர் வைத் திருக்கும் கலத்தையும் (பாத்திரத்தையும்) நீரால் நிரப்பு வார்களாம். இதனைச் சேமச் செப்பில் பெlஇயர்’ என் பதால் உணரலாம். இன்னும், வெய்ய என்னும் சொல்லுக்கு விரும்பத் தக்க என்று பொருள் பண்ணாமல் சூடான என்று பொருள் பண்ணி, வெய்ய வெப்ப என்பதற்கு மிகச் சூடான’ என்றும் பொருள் கூறிக் கொள்ளலாம். ஏன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/122&oldid=550692" இலிருந்து மீள்விக்கப்பட்டது