பக்கம்:இன்ப வாழ்வு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

127


தேரை விட்டு இறங்கி ஒடோடியும் வந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டான். முத்தம் கொடுத்தான். குழந்தையின் பவளம் போன்ற அழகிய வாய் தன் மார்பில் அழுந்தும் படியாக அணைத்துக் கொண்டான். கொஞ்சிக் குலா வினான். பின்பு குழந்தையை நோக்கி, ‘என் செல்வமே! அம்மா அழைக்கின்றாள்; அழாமல் வீட்டுக்குப் போ! நான் தின்பதற்கு வாங்கிக் கொண்டு விரைவில் வந்து விடுகின்றேன், என்று போக்குக் காட்டினான். உள்ளே அனுப்புவதற்குப் பெரிதும் முயன்றான். அக்குழந்தையா அவ்வளவோடு விட்டுவிடுவான்? தகப்பனுடைய கால்களை இறுகக் கட்டிக்கொண்டான்; நானும்தான் வருவேன் என்று மேலும் அழத்தொடங்கினான். என்ன செய்வான் தந்தை வேறு வழியில்லை. மறுபடியும் குழந்தையைத் தூக்கிக் கொண்டான். ‘என் செல்வமே’ என்று புகழ்ந்து கொண்டே உள்ளே நுழைந்தான்.

தந்தை மகனோடு நுழைவதைத் தாய் கண்டாள். அவ்விதமாக மகனைத் தூண்டி விட்டவளும் அவளே யல்லவா? ஆனால், அவள் ஒன்றையும் அறியாதவள் போல நடிக்கத் தொடங்கினாள். குழந்தையை நோக்கி, ‘ஏண்டா குறும்பா! எங்கேயோ பறந்து பறந்து புறப் பட்டார்களே - நீ ஏன் அழுது தடுத்து அழைத்துக் கொண்டு வந்து விட்டாய்? உன்னை நன்றாக உதைக்க வேண்டும்’ என்று சொல்லி மிரட்டினாள். அடிப்பவள்போல் கோல் ஒன்றையும் எடுத்துக்கொண்டு குழந்தையைக் குறுகினாள். தந்தைதான் அடிக்க விடுவானா? தடுத்துக் கோலையும் வாங்கிக் கொண்டான். அப்போது அடுத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/128&oldid=550698" இலிருந்து மீள்விக்கப்பட்டது