பக்கம்:இன்ப வாழ்வு.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இன்ப வாழ்வு


தெருவில் அயலாள் வீட்டில் மத்தளம், யாழ் முதலிய இயங்கள் இனிமையாக வாசிக்கப்பட்டன. அவ்வொலி ‘வா வா’ என்று தன்னை அழைப்பது போலத் தந்தைக்குக் கேட்டது. மனைவியையும் மைந்தனையும் விட்டுச் சென்றானா அவன்? இல்லவேயில்லை.

அன்று, மணம் ஆவதற்கு முன், தன் மனைவி தோழி மார்களோடு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நினைவுக்கு வந்தன. ஆகவே, அன்றுபோல் இன்றும் அன்பு வெள்ளம் பெருக்கெடுத்தது. தன் கையிலிருந்த குழந்தையை அவள் கையில் கொடுத்தான். அவளும் மகிழ்ந்து வாங்கிக் கொண்டாள். அத்தலைவனும் அத்தலைவியும் அன்று தான் புதிதாகக் காதலித்த காதலர்கள் போல் காணப் பட்டார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ‘பிரிந்தவர் கூடினால் பேச வேண்டுமோ என்பது கம்பர் வாக்கன்றோ?

மறுநாள் காலை, தலைவன்மேல் பரிந்து புகழ்ந்து கொண்டே தலைவியின் உயிர்த்தோழி உள்ளே நுழைந் தாள். தலைவியும் தோழியை அழைத்து அருகில் அமர்த்திக் கொண்டாள். முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகள் அனைத் தையும் ஒன்று விடாமல் உரைத்தாள். மேலும் தொடர்ந்து சில உண்மைக் கருத்துக்களைக் கூறலானாள்:

“என் அருமைத் தோழியே! எப்போதும் பெரியோர் வாக்கு பொய்க்காதுபோலும். என்னவென்று கேள்! என் கணவரின் கெட்ட நடத்தையைப் போக்கி நல்வழிப்படுத்த என் குழந்தை மிகவும் உதவியாய் இருந்தான். இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/129&oldid=550699" இலிருந்து மீள்விக்கப்பட்டது