பக்கம்:இன்ப வாழ்வு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இன்ப வாழ்வு

காண்டல் விருப்பொடு தளர்புதளர் போடும் பூங்கட் புதல்வனை நோக்கி நெடுந்தேர் தாங்குமதி வலவஎன் றிழிந்தனன் தாங்காது மணிபுரை செவ்வாய் மார்பகஞ் சிவணப் புல்லிப் பெரும செல்லினி அகத்தெனக் கொடுப்போர்க்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த மாநிதிக் கிழவனும் போன்மென மகனொடு நானே புகுதந் தோனே யானது படுத்தனென் ஆகுதல் நாணி இடித்திவன் கலக்கினன் போலுமிக் கொடியோன் எனச்சென் றலைக்குங் கோலொடு குறுகத் தலைக்கொண் டிமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனைப் பயிர்வன போலவந் திசைப்பவும் தவிரான் கழங்கா டாயத் தன்றுகம் அருளிய பழங்கண் ணோட்டமும் கலிய அமுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே.”

பொருள் உணர்ந்து படிப்போர்க்கு இச்செய்யுள்

பேரின்பம் கொடுக்கும் என்பது திண்ணம். இக்கதை இச் செய்யுளின் முழு விளக்கமே. இப்பாடல், தலைவி தன் உயிர்த்தோழிக்குக் கூறியதாகவே அமைந்துள்ளது. இங்கு, காதல் கதை ஒன்றையும் நோக்காது, பாடலின் உண்மைக் கருத்தை ஊன்றி உணரவேண்டும். பிள்ளையைக்கொண்டு திருத்தவேண்டிய - திருந்த வேண்டிய நிலையில் பெற்றோர் இருத்தலாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/131&oldid=550702" இலிருந்து மீள்விக்கப்பட்டது