பக்கம்:இன்ப வாழ்வு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடும் புருவக் கோட்டம்

எவராலும் எண்ணிப் பார்க்கவும் முடியாத ஒருவகைக் கற்பனைக் கருத்தைத் திருவள்ளுவர் ஒரு குறள் உருவில் எழுதியமைத்துள்ளார். ஒரு காதலன் தன் காதலியின் புருவங்கள் செய்யும் பொல்லாமையை நொந்து புலம்புவதாக அக்குறள் அமைக்கப்பட்டிருக்கிறது.

‘இந்தப் பெண்ணின் பொல்லாத புருவங்கள் கோணி வளைந்து கண்களின் மேல்புறம் செல்லாமல் ஒரே நேர் நெட்டாய்க் கண்களினூடே சென்று திறக்க முடியாதபடி அவற்றை மறைத்திருக்குமாயின், அக் கண்கள் இப்போது எனக்கு இவ்வளவு துன்பம் செய்திருக்கமாட்டா என்பது தான் அவனது புலம்பல். இக் கருத்துடைய குறள் வருமாறு; ‘கொடும்புருவங் கோடா மறைப்பின் கடுங்களுர்

செய்யல மன்னிவள் கண்”

இக்குறளினை ஆராய்வாம்:

(பதவுரை) கொடும் புருவம் = (இவளுடைய கொடிய) வளைந்த புருவங்கள், கோடா(து) = அவ்வாறு வளையாமல், மறைப்பின் = (கண்களின் நேர் குறுக்கே சென்று திறக்கமுடியாதபடி) மறைந்திருக்குமாயின், இவள் கண் = இவளுடைய கண்கள், நடுங்கு அஞர் = நடுங்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/132&oldid=550703" இலிருந்து மீள்விக்கப்பட்டது