பக்கம்:இன்ப வாழ்வு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இன்ப வாழ்வு


கூடிய துன்பத்தை, செய்யல மன் = உண்டாக்கியிருக்க மாட்டா; அவ்வாறு அந்தப் புருவங்கள் மறைக்காமை யினாலேயே இவள் கண்கள் என்னைத் துன்புறுத்துகின்றன.

கொடுமை - கொடிய பொல்லாத தன்மை, வளைவு; கோடுதல் = கோணுதல்; கோடாது = கோணாது = வளையாது; அஞர் = துன்பம்; மன் . சொல்லாது ஒழிந்த “ஒழியிசை’ப் பொருள் தருவதோர் இடைச் சொல்.

(ஆராய்ச்சி விரிவுரை) இந்தக் குறளில், உயர்ந்த சொல் நயங்களையும் பொருள் நயங்களையும் உலகப் பெரும் புலவனாம் வள்ளுவன் வாரி வாரிக் கொட்டி யிருக்கிறான்! அவற்றை நாம் அள்ளிக் கொள்ளுவமா? தலைமகளின் கண்வலையில் சிக்கித் தவிக்கும் தலைமகன், அவள் கண்ணின் மேல்புறத்துள்ள புருவத்தைக் காய்கிறான். புருவம் கண்ணுக்குத் துணை செய்கின்றதாம். மிகமிக அழகாய் அமைந்ததும் மேலே மை பூசப்பட்டதுமான புருவத்தின் தோற்றப் பொலிவு கண்ணுக்கு மேலும் மேலும் அழகு தருவது இயற்கைதானே! இயற்கையாகவே வருத்துங் கண்ணோடு இந்தப் புருவமும் சேர்ந்து கொண்டால் அவன் என்ன ஆவான்? அதனால்தான் புருவத்தைக் ‘கொடும் புருவம்” என்றான்.

இங்கே சொல்லப்பட்டுள்ள கொடுமை (கொடும்) என்னுஞ் சொல்லுக்கு, பொல்லாத கொடிய தன்மை எனவும் வளைவு எனவும் இரு பொருள் உண்டு. இவற்றுள் முதல் பொருளை எல்லோரும் எளிதில் அறிவர். வளைவு என்ற பொருள்தான் பலர்க்குத் தெரியாது. அவர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/133&oldid=550704" இலிருந்து மீள்விக்கப்பட்டது